வாட்ஸ்அப் அப்டேட்: தவற்றை திருத்த வாய்ப்பு!

whatsapp - 2026

உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி இல்லை. ஆனால், ஒருமுறை அனுப்பப்பட்ட மெசேஜை மட்டுமே நீக்க முடியும் வசதி ஏற்கனவே உள்ளது.

இந்நிலையில், விரைவில் வரவிருக்கும் புதிய அம்சம் மெசேஜை அனுப்பிய பிறகும் அவற்றைத் திருத்துவதை சாத்தியமாக்குகிறது.

வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் வலைத்தளமான Wabetainfo ஆல் இந்த அம்சம் குறித்து கண்டறியப்பட்டது.

அதன்படி,வாட்ஸ்அப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய அம்சம் குறித்து வேலை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ட்விட்டரில் புகாரளிக்கப்பட்டவுடன் வாட்ஸ்அப் நிறுவனம் அதனை நிராகரித்தது. இருப்பினும், இறுதியாக, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, தற்போது வாட்ஸ்அப் மீண்டும் எடிட் அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து வேலை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக, Wabetainfo தற்போது எடிட் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, நீங்கள் அனுப்பிய மெசேஜை தேர்ந்தெடுக்கும்போது, ஸ்கிரீன்ஷாட் ஒரு பிரத்யேக திருத்த விருப்பத்தைக் காட்டுகிறது.

மேலும், மெசேஜை நகலெடுத்து அனுப்புவதற்கான விருப்பங்களுடன், பயனர்கள் திருத்த விருப்பத்தையும் பெறுவார்கள். குறிப்பாக, திருத்த பட்டனை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் செய்தியை அனுப்பிய பிறகும், அதில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால் அதை நீங்கள் சரிசெய்யலாம்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் சோதிக்கப்பட்டுள்ளது. மேலும்,அதே அம்சத்தை iOS மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கொண்டு வர WhatsApp நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories