Research - 2026

வீணாகும் உணவிலிருந்து சிமெண்ட்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Research - 2026

ஜப்பானில் வீணாகும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிப்பதில் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

கட்டுமானத்திற்கு முக்கியமான கான்க்ரீட் தயாரிப்பதற்கான தற்போதைய செயல்முறைகளால் சுற்றுசூழல் பாதிக்கும் வாயுக்கள் வெளியேறப்படுகின்றன.

எனவே சிமெண்டுக்கு மாற்றாக சூழ்நிலைக்கு கேடு விளைவிக்காத ஒன்றை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.

வீடுதோறும் வீணாக்கப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

வீணாக வீசப்படும் உணவுகளில் 3 நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை உறுதியான சிமெண்டாக மாற்ற முடியும் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

உணவுப் பொருட்கள் அழுகுவதால் சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியாகும் வெளியாவதும் இதனால் குறையும் என்பதால் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முடிவு கட்ட இயலும் என்று அவர்கள் கூறினர்.

தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி விரைவில் முழுமை அடையும் என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.