கடலூரில் கெடிலம் ஆற்றில் இன்று குளித்த திருமணமான பெண் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த கீழஅருங்குளம் குச்சிபாளையம் கெடிலம் ஆற்றில் இன்று திருமணமான பெண் உட்பட 6 சிறுமிகள் மற்றும் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது அவர்கள் நீரில் மூழ்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே, அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
