தென்காசி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி  என்பவரின் மகள் சுப்ரியா வ (8) , காய்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.   அதேபோல் நேற்றிரவு அதே கிராமத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா வயது (6),  நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதைத் தொடர்ந்து இன்று காலை சுகாதாரமான குடிநீர் வழங்க கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

thenkasi - 2026

Related articles

Recent articles

spot_img