- 2026

ஜூன் 20ல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ..

சற்றுமுன்

புதிய அறிவிப்பின்படி 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியாக உள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து இருந்த நிலையில், ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, மே 2022ல் நடைபெற்ற 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஜூன் 20 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 நண்பகல் 12 மணிக்கும் வெளியிடப்படுகிறது.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 2026
IMG 20220616 125833 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.