October 13, 2024, 1:40 PM
32.1 C
Chennai

கால் கைகள் மரத்து போகிறதா? தீர்வு இதோ..

hand nee

அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல், வலி போன்றவை. கஷ்டப் பட்டு வேலைபார்க்கும் அன்சிவருக்கும் சாதாரணமாக இருக்கும் ஒன்று தான் இது.

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.

அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.

அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.

அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.

அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது.

எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.

சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.

ALSO READ:  தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் வலியுறுத்தல்!

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.

சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

உணரும் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும்போது அடி எடுத்து வைக்கும் போது தரையில் கால் படாத உணர்வு ஏற்படும்.இந்த சூழ்நிலையில் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.மரத்துபோன நிலையில் நடக்க முயற்சிக்க கூடாது. சரியானபிறகே நடக்க வேண்டும்.

திடீரென உடல் மரத்துப்போய் செயலிழந்து போனால் அசைக்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ளுவது கட்டாயம்.
தடுமாறும் நிலைக்கு ஆழனாலும் அல்லது தலை கழுத்து முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து மறத்துப் போகுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலும். மருத்துவரை சந்திப்பது அவசியம்.

திடீர் என அசைக்க முடியாத நிலைக்கு போனாலும், மருத்துவரை பார்க்க வேண்டும்.
பதட்டமான சூழ்நிலையில் மலம் வந்தாலும் கட்டுபடுத்த முடியாத நிலைக்கு போய்விடுவீர்கள்.
நினைவு தடுமாற்றம் திடீரென மயக்கம், போன்ற அறிகுறிகள் இருந்தாலுகூடமருத்துவரை பார்பது கட்டாயம்.
பார்வைக் குறைபாடு ஏற்பட்டாலும், குறந்த பட்சம் மரத்துப் போன இடங்களை கைகலால் தேய்த்து விடலாம்.இயல்பானதாக இருந்தால் சரியாகிவிடும் இல்லை என்றால் தீவிரமாகும்.

இன்று இதற்கான இலகு தீர்வை தான் பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையான பொருட்கள் உப்பு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் என்று சொல்லப் படுகின்ற வினாகிரி. இவற்றை பயன்படுத்தி எப்படி மறுத்துவத்தை செய்வது என பார்க்கலாம்.

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து பிளாஷ்டிக் பேஷன் ஒன்றில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மூன்று தேக்கரண்டி விடவும். நன்றாக மிக்ஸ் செய்த பின் அதில் உப்பு மூன்று கரண்டி வரை போட்டு மிக்ஸ் செய்யுங்கள்.. நன்றாக உப்பு கரைந்ததும்.

தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்கிறதா என பாருங்கள்..இப்போது இரண்டு கைகளையும் நீரில் வைத்து வைத்து எடுங்கள். அதே போல் கால்களையும் வைத்து எடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் போதுமானது.. இரத்த ஓட்டங்கள் சீராவதுடன் கை கால் வலி உளைச்சல், நரம்பு இழுத்துக் கொள்ளுதல் , போன்றவை குணமாகிவிடும்..ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்…!!

ALSO READ:  'நிமுசுலைடு' மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

பாதம், கை மற்றும் கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருந்தால்?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்:

வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

2.. பாதம் மட்டும் மரத்துப் போதல்?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்:

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

3.. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்:

தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

4.. சிவந்த உள்ளங்கை?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்:

ALSO READ:  முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!

கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

5.. வெளுத்த நகங்கள்?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்:

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

6.. விரல் முட்டிகளில் வலி?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்:

உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

7.. நகங்களில் குழி விழுதல்?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்:

உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

பாதம், கை மற்றும் கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருந்தால்?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week