அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும். என நெல்லை அருகே நடந்த யோகா விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தில் பா.ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட கட்சி. அந்த கட்சியில் தகுதி உள்ளவர்கள், திறமை உள்ளவர்கள், தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்றவர்கள் அதாவது 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடம் இல்லாததால் வேறு மண்டபத்திற்கு பொதுக்குழு கூட்டத்தை மாற்றி நடத்த வேண்டும். அதனால் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிபோட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டபோது, அ.தி.மு.க.வின் விதி 20-பி படி, டவுன் பஞ்சாயத்து செயலாளர் உள்பட அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும் என்பது விதி. அந்த கட்சியை கட்டி காக்க திறமையான தலைமை வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது சரியான முடிவு தான் என்றார்.