நாளை அதிமுக பொதுக்குழு-இன்று ஓபிஎஸ் வசம் கணக்குகள் ஒப்படைப்பு..

Published:

நாளை வானரகத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று கட்சி மூத்த நிர்வாகிகள் சார்பில் கட்சி கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

images 42 - 2026

அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் (நாளை) தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை கட்சியில் பதற்றம் குறையவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. திட்டமிட்டப்படி நாளை பொதுக்குழு கூடுமா? என கேள்வி எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சி கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு பொதுக்குழுவிலும் அதிமுகவின் வரவு, செலவு அறிக்கை என்பது தாக்கல் செய்யப்படும். தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தான் அக்கட்சியின் பொருளாளருமாக உள்ளார்.

ஆகையால் பொருளாளர் தான் அந்த வரவு செலவு கணக்குகளை பொதுக்குழுவில் தாக்கல் செய்வார். அந்த வகையில் அதிமுகவின் கடந்த 2 ஆண்டுகளாக உள்ள வரவு, செலவு கணக்கு விவரங்களை அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ்க்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த 2021 ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. ஜன.9 முதல் தற்போது வரை எவ்வளவு நிதி கட்சிக்கு வந்துள்ளது? எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img