திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஜூன் 29-ந் தேதி துவக்கம்..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்
கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 29-ந் தேதி தொடங்குகிறது.
ஜூலை வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

1718486 thiruvattar adikesava perumal temple - 2026

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு 418 ஆண்டுகளுக்குப் பின்பு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்த கோவிலை புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. கோவில் கருவறை விமானம், கூரை மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபம் ஆகியன அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பளபளப்புடன் காட்சி அளிக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு வாஸ்து கலச ஹோமம், இரவு 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை, சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது. 30-ந் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம், மாலை 5 மணிக்கு எம்.பி.ஆதிராவின் ஆன்மிகச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் தியா நாயர் வழங்கும் பரதநாட்டியமும், வருகிற 1-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்கத்தா முகுல் முகர்ஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

2-ந் தேதி இரவு 7 மணிக்கு பிந்து லட்சுமி வழங்கும் கிருஷ்ணகதா நடனம், 3-ந் தேதி மாலை 5 மணிக்கு பவநேத்ரா குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி குழு சர்மிதா பிள்ளையின் பரதநாட்டியம், 4-ந் தேதி மாலை 5 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சாமி வழங்கும் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு காணிமடம் குழுவினர் வழங்கும் நர்த்தன ரம்மிய பஜனை, 5-ந்தேதி மாலை 5 மணிக்கு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா வழங்கும் அருளுரை, இரவு 7 மணிக்கு சென்னை ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறுகிறது.

6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம், 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வேத மந்திரம் முழங்க கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. 7 மணிக்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

8 மணிக்கு முளவிளை ஸாத்விகா சமாஜ இசை நாட்டிய அகாடமி சார்பில் “துவாபர யுகத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் பரதநாட்டியம் நடைபெறுகிறது. 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கர் வழங்கும் கும்பாபிஷேக மகிமை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி பஜனை ஆகியவை நடைபெறுகிறது. 7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் கோபிகா வர்மா வழங்கும் மோகினியாட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டலபூஜை, 9-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமர பிரதிஷ்டை, மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, கோவிலைச்சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் தீபமேற்றும் லட்ச தீப விழா, இரவு 7 மணிக்கு பரத நாட்டியம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அன்ன தானம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories