குற்றவாளியை ஆளுனர் பாராட்டுவதா?: ராமதாஸ் கண்டனம்

ramadossசென்னை: ஒரு குற்றவாளியை ஆளுநர் பாராட்டுவதா?; தமிழக சட்டப் பேரவை அதிமுக பொதுக்குழுவாக மாறிவிட்டது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரை அ.தி.மு.க.வின் புகழ்பாடும் நிகழ்வாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுனர் உரையின் நோக்கமே வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த முன்னோட்டம் தருவது தான் என்ற வழமையை மாற்றிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆளுனரின் உரையில் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசியும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை சரி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுனர் உரையில் இல்லை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரையை தமிழக அரசு வடிவமைத்திருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரை அமைந்ததன் மூலம் சட்டப்பேரவையின் மாண்பு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுவிட்டது. மக்களவைத் தேர்தலிலும், திருவரங்கம் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, முறைகேடு மற்றும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியதன் மூலம் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மோசடியின் மூலம் அ.தி.மு.க. பெற்ற வெற்றியை, தமிழக அரசின் வெற்றியைப் போன்று ஆளுனர் உரையில் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மொத்தத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தைப் போலவும், தமிழக ஆளுனர் ரோசய்யாவை அ.தி.மு.க. நிர்வாகி போலவும் தமிழக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர். அ.தி.மு.க. மற்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகழ் பாடியதைத் தவிர ஆளுனர் உரையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஆனால், இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறைக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் &ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருப்பது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆங்கில வழிக் கல்வியை புகுத்திவிட்டு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியிருப்பதாக ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கும் போது வேதனை கலந்த சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படவில்லை. மின்வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியமும், ஆதரவற்றோர் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆளுனர் உரை வளர்ச்சித் திட்டங்களை வகுத்துத் தரும் ஆவணமாக அமைய வேண்டும்; ஆனால், இந்த ஆளுனர் உரை பழைய திட்டங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும், அமைச்சர்கள் தாக்கல் செய்யும் மானியக் கோரிக்கைகளாக இருந்தாலும் அதில் எந்த திட்டங்களும் இடம் பெறக்கூடாது; அனைத்துத் திட்டங்களும் அவை விதி எண் 110&ன் கீழ் ஜெயலலிதா படிக்கும் அறிக்கையில் தான் இடம் பெற வேண்டும் என்பது கடந்த 4 ஆண்டுகளாக எழுதப்படாத விதியாக மாறிவிட்ட நிலையில், ஆளுனர் உரையில் புதிய திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான். மொத்தத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுனர் உரை என்ற சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு எதுவுமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Topics

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories