1721067 indian goast courd - 2026

கடலில் சிக்கிய மீனவர்கள் ஐவர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..

சற்றுமுன் இந்தியா

நடு கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த மீனவர்கள் ஐவரை கடலோர காவல்படை யினர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்

கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர். இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

1721067 indian goast courd - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.