சொந்தமாக கார்கூட இல்லாத ‘பரம ஏழை’… சோனியா காந்தி ரே-பரேலியில் மனுத் தாக்கல்!

Published:

sonia gandhi file nomination - 2026

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று ரேபரேலியில் மனுதாக்கல் செய்தார். அவர், தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாகப் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி அடைந்துள்ள சோனியா, தற்போது 5வது முறையாக போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய, தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.

அதன் பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவில்…. சொத்துமதிப்பாகக் குறிப்பிட்டுள்ளவை…

2017-2018 நிதியாண்டில் ரூ. 9.6 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை ஒன்று மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 11 கோடி
சோனியா பெயரில் 3.2 ஏக்கர்கள் நிலம் உள்ளது.
சோனியாவின் வங்கி கணக்கில் ரூ. 60,000 சேமிப்பு மற்றும் வைப்பு நிதியில் ரூ. 16.59 லட்சம் தொகை உள்ளது.
குறிப்பாக, சோனியாவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img