பொன்னார் கொண்டு வந்த பொன்னான ’இணைப்பு’ திட்டங்கள்!

Reporters Diary உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்

parvathipuram bridge - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்னார் கொண்டு வந்த பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலத்தை இன்று தூற்றும் மக்கள் பலரும், நாளை இந்த பாலம் வழியாக விரைவாக, குறுகிய நேரத்தில்பயணம் செய்யும்போது,” இந்த பாலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் ஊர் போய் சேரமுடியாது” என்று கூறுவார்கள்.

நெல்லை ஜங்ஷன் மேம்பாலத்தில் செல்லும் போது கருணாநிதி நினைவு வருவது போல் பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலங்களில் செல்லும்போது பொன்னாரின் நினைவு கண்டிப்பாக வரும்.

நேற்று மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு மேம்பாலம் வழியாகச் செல்லும் போது, இந்த பாலம் வருவதற்கு முன்னர் மார்த்தாண்டத்தில் வரிசைகட்டி பஸ்கள் நின்று மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும், இந்த பாலம் வந்ததால் ஐந்தே நிமிடத்தில் குழித்துறையை அடைந்ததையும் நினைத்துப்பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

பால வேலை நடந்த இரண்டு வருட காலத்தில் அப்பகுதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. இப்போது பாலத்தின் கீழ்ப்பகுதியும் வேலை முடிந்து போக்குவரத்து நடப்பதால் இப்பகுதி வர்த்தகம் முன்புபோல் மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இங்குள்ள கடைக்காரர்கள் பலரிடம் பேசியபோதும்,”மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கியுள்ளனர்” என சந்தோஷ பதிலைக்கேட்க முடிந்தது.

பொன்னார் கொண்டுவந்த பொன்னான திட்டமாக இந்த இரண்டு பாலத்தையும் காண்கிறேன். 

தி.சி.

Photo : Jackson Herby (File Photo)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.