
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனா அறிகுறிகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனா அறிகுறிகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றார்.
அவ்வாறு செல்லும்போது கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள். மேலும் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் இருந்து கொண்டே சுயமருத்துவம் செய்ய வேண்டாம். செல்போனில் மருத்துவர்களை தொடர்பு கொண்டு அறிவுரை கேட்கலாம் என பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.