தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாக குழு மூலம் நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஒரே இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயில்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவது, வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.