குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வீசும் சூறைக்காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் சந்தைகள் வெறிசோடின.
சில நாட்களாக இம்மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அதிகாலையில் சூறாவளியாக காற்று வீசுகிறது. கடலில் மிக உயரமாக அலை எழும்புகிறது. இதனால் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து துவங்குவதில் தினமும் தாமதம் ஏற்படுவதுடன் அடிக்கடி நிறுத்தியும் வைக்கப்படுகிறது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் புறப்பட்டு சென்ற 350 படகுகள் சிறிது நேரத்திலேயே கரை திரும்பின. நேற்றும் படகுகள் செல்லவில்லை. சிறிய நாட்டு படகுகள் மற்றும் வள்ளம் கரையில் பாதுகாப்பாக கட்டி போடப்பட்டுள்ளன.
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களாக மீன்வரத்து இல்லாததால் சந்தைகள் வெறிசோடின. துாத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து மீன் வந்தாலும் அது போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள 2 சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர். கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள 2 சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர். தடைகாலம் முடிந்தது கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் சூறாளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறைந்த அளவிலான விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இவர்களும் கடலுக்குள் சூறாவளி காற்று வீசியதால் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.
சுறா மீன்கள் இதில் ஒரு படகில் இருந்த மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட ஒரு சுறா மீனும், 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியிருந்தன. அந்த சுறா மீன்களை, மீனவர்கள் ராட்சத கிரேன் மூலம் படகில் இருந்து இறக்கி ஏலக்கூடத்திற்கு எடுத்து சென்று ஏலமிட்டனர். அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும், 200 கிலோ எடை கொண்ட மீன் ரூ.50 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. பின்னர் அந்த மீன்களைய கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய மீன் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.