தங்கம் விலை இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.544 சரிந்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் ஜூலை 1ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்தது.ஜூலை 2ம் தேதி சவரனுக்கு 56 ரூபாயும் ஜூலை 4ம் தேதி 48 ரூபாயும் ஜூலை 5ம் தேதி 56 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,440க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரை கலக்கத்தில் ஆழ்த்தியது. ஆனால் நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில், சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.இவ்வாறு தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை அளித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து, ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.62.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை நேற்று ரூ. 520 குறைந்த நிலையில், இன்று ரூ.544 குறைந்ததால் 2 நாளில் சவரனுக்கு ரூ.1,064 சரிவை கண்டுள்ளது.