அதிமுக பொதுக்குழு வழக்கு இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.
அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து 2வது நாளாக சென்னை உயர் நீதிமன்றம், இன்றும் (ஜூலை 08) விசாரணை நடைபெற்றது. இதில், பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் விறுவிறுப்பான வாதத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு ஒத்திவைத்தார். அதே நாளில் காலை 9:15 மணிக்கு பொதுக்குழு கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.