
ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே எதிர்பாராதவிதமாக கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கையெறி குண்டு வெடித்து சிதறியது.
இதில் ராணுவ கேப்டன் மற்றும் ராணுவ அதிகாரி ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக உதம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். கேப்டன் ஆனந்த் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பா நகரை சேர்ந்தவர். உயிரிழந்த நாயிப் சுபேதார் பக்வான் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.