அரசியல் என் நீண்ட நாள் ஆசை: ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்

Published:

powerstar-srinivasan சென்னை: தான் புதிதாக அரசியலில் தற்போது இறங்கியது ஏன்? என்பது குறித்து நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘தமிழ் மாநிலக் கட்சி’யில் நேற்று தன்னை இணைத்துக் கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் கலைத்துறைப் பிரிவின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் அரசியல் பிரவேசம் ஏன் என்பது குறித்து ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆமாம்… நான் அரசியலில் இறங்கியிருப்பது உண்மை. கலைத்துறையில் சேவை புரிந்து வருகிறேன். அரசியலில் இறங்கலாம் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் மாநிலக் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கனகராஜ் எனது நண்பர். ஆகவே, அக்கட்சியில் இணைந்துள்ளேன்” என்று பதிலளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img