images 2022 07 27T114715.684 1 - 2026

அருப்புக்கோட்டை- பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த 5 பேர் கைது..

சற்றுமுன்
images 2022 07 27T114715.684 1 - 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்த 5 பேரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது உள்ள பெண் ஒருவர் நேற்று தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளார் அப்போது அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இவர்களை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்து
வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் அந்தப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடியது இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல் நிலைய போலீசார் ஐந்து நபர்களை கைது செய்தனர் அதில் ஒருவர் 17 வயது சிறுவர் ஆவார் மேலும் குற்றம் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.