
கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் ஹிந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வகையில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆக.,29) மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.