இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோவினைக் கட்டுப் படுத்துவதற்காக, சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சொட்டு மருந்துகளை வழங்க தலிபான் பயங்கரவாதிகள் தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகள் வழங்குகின்ற போலியோ சொட்டு மருந்தில் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப் பட்டிருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணத்தால், அங்கே போலியோ சொட்டு மருந்து வழங்க அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களையும் கடத்திச் சென்று கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலுசிஸ்தானில் உள்ள சோகப் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை போலியோ மருந்து வழங்குவதற்காக ஊழியர்கள் சென்றனர். அவர்கள் 4 பேரை தீவிரவாதிகள் திடீரென கடத்திச் சென்றனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த ஊழியர்கள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான்: போலியோ முகாம் ஊழியர்கள் 4 பேர் கடத்திக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories