
.
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஜெ.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1.264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
மதுரையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அவர், காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெ.பி.நட்டா வருகையையொட்டி பாஜகவினர் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.