
இன்று புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர்
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் மிக முக்கியமாக சொல்லகூடியது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளிலும் தவிர்க்காமல் நாம் செய்யும் பித்ரு வழிபாடானது அவர்களது ஆசிர்வாதத்தை நிறைவாக அளிக்கும். அப்படி சிறப்புமிக்க அமாவாசை தான் மகாளயபட்ச அமாவாசை என்னும் புரட்டாசி அமாவாசை.
இந்த அமாவாசை என்பது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்து பிரதமையில் தொடங்கி அமாவாசை வரை உள்ள நாட்களே. மகாளய பட்ச காலத்தில் நிறைவு நாளே மகாளயபட்ச அமாவாசை. இதில் மகாளயம் பட்சை என்பதின் அர்த்தம் பட்சம் என்றால் பதினைந்து ஆகும். மகாளயம் என்பது பித்ருக்களை குறிக்கும். அதனால் தான் இந்த புரட்டாசி அமாவாசை மகாளயபட்ச அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலத்தில் நமது முன்னோர்கள் அவர்களது பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு வருகிறார்கள். நாம் இந்த நாளில் அவர்களை வணங்கும் போது நமது வழிபாடுகளை கண்டு மகிழ்கிறார்கள். நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். இத்தகைய நாளில் நீங்கள் உங்கள் முன்னோர்கள வணங்கினால் அரிய பேறும் கிட்டும்.
இதன் மூலம் முன்னோர்களின் சாபத்தை பெற்றிருந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும். உங்களுக்கு பித்ரு தோஷம் இருந்தால் நீங்கள் அதிலிருந்து விலக முடியும். இதனால் குடும்பத்தில் மங்கலகரமான காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். மறந்தவனுக்கு மாகாளயம் என்பார்கள். உங்கள் முன்னோர்களை நீங்கள் மறந்திருந்தால் இந்நாளில் தர்ப்பணம் கொடுத்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.
மகாளய அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய ஸ்தலமாக விளங்கும் நீர்நிலைகளில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர்.
ராமேஸ்வரம்: ராமநாத கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இங்கு தினமும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக அமாவாசை நாளன்று அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் செய்வர். மேலும் மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் இன்று மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான மக்கள் காலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிமாகாளய அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி நதியில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் ஏரளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து குற்றாலம் கோயிலில் வழிபட்டனர்.
தேனி மாவட்டத்தில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தமிழக முக்கிய கோவில்களில் ஆறுகள் சமுத்திரம் நதிகளில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்ய அதிகளவில் வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.