
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த மாலை கைக்கிளி பட்டு வஸ்திரம் திருப்பதி திருமலைக்கு பக்தி பூர்வமாக சென்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் 108 வைணவ தளங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்க பெருமாள் மீது தீராத மையல் கொண்டு இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வடபத்திர சயனப் பெருமாளுக்கு அணிவிக்க இருந்த மலர் மாலையை தான் சூடி அழகு பார்த்துவிட்டு பின்னர் பெருமாளுக்கு அணிவித்தார்.
பெருமாளும் அவரது பக்தியை ஏற்று ஆண்டாள் நாச்சியாரை பங்குனி உத்திர நன்னாளில் கைத்தலம்(திருமணம்) பற்றினார். இதனை நினைவு படுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மலர் மாலை கைக்கிளி வஸ்திரம் மரியாதைகள் இங்கு கோவில் கொண்டிருக்கும் வடபத்திர சயன பெருமாளுக்கு கொண்டு சென்று தினமும் அணிவிக்கப்படும்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை, கைக்கிளி, பட்டு ஆகியன புரட்டாசி மாதம் திருப்பதி திருமலையில் கருட சேவை அன்று மூலவரான மலையப்ப சாமி அணிவதற்கும் பங்குனி மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேரோட்டத்தின் போது ரங்கநாத பெருமாள் அணிவதற்கும் சித்திரை மாதம் மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரையின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர் அணிவதற்கும் எடுத்துச் செல்லப்படும் இந்த நிகழ்வு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது .
ஒரு கோவிலில் இருந்து வஸ்திரம், மாலை ஆகிய மங்களப் பொருட்கள் வேறொரு கோவிலுக்கு செல்வது என்பது எங்குமே காண முடியாத சிறப்பாகும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத கருட சேவையின் போது மூலவரான மலையப்ப சுவாமி அணிவதற்காக ஆண்டாளின் சூடி கலைந்த மாலை கைக்கிளி, பட்டு மரியாதை ஆகியவை திருப்பதி திருமலைக்கு கோவில் அர்ச்சகர்களால் கொண்டு செல்லும் நிகழ்ச்சி இன்று செப் 29 தேதி மதியம் 12 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் வைத்து நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள் ரங்க மன்னருக்கு சிறப்பு திருமஞ்சனம் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கிலோ கணக்கான பல வண்ண மலர்கள் 10 க்கும் மேற்பட்ட பூ அலங்கார நிபுணர்களால் தொடுக்கப்பட்டு சுமார் 15 அடி நீளம் உள்ள பல வண்ண மலர் மாலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சாரதி செய்து வைத்தார் தொடர்ந்து ஆண்டாள் சூடி கலைந்த மாலை கிளி பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப் பொருட்கள் ஒரு பிரம்பு கூடையில் எடுத்து வைக்கப்பட்டு அதனை திருப்பதி திருமலைக்கு கொண்டு செல்லும் ஸ்தானிகர் பிரசன்னா மேல தாளங்கள் முழங்க மாட வீதி வழியே கொண்டு வந்து திருப்பதி திருமலைக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், சிறார் பாலியல் குற்ற தடுப்பு அமர்வு சிறப்பு நீதிபதி கே பூரண ஜெய ஆனந்த் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் ஜவகர் கோவில் மணியம் கோபி, கிச்சப்பன், வெங்கடேச ஐயங்கார், பாலாஜி பட்டர், மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரண்டு இருந்து அனுப்பும் வைபவத்தை கண்டு தரிசத்தனர் விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திரு கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்
