December 17, 2025, 5:07 AM
25.3 C
Chennai

விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக்கடை அமைப்பதற்கு அனுமதி-

images 85 - 2025

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக்கடை அமைப்பதற்கு அனுமதி‌என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்காக 6109 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5783 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 326 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதையும் படியுங்கள்: 17-ந் தேதி எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தரை தளத்தில் மட்டுமே பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. மேலும் அந்த அறை 25 சதுர மீட்டருக்கும் அதிகமான சுற்றளவில் இருக்கக்கூடாது. இதையும் படியுங்கள்: திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளை விற்பனை செய்யக்கூடாது.

இங்கு புகை பிடிக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்கவிடக்கூடாது. உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்த பட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். தணிக்கை செய்வதற்காக அதிகாரிகள் வரும்போது பட்டாசு கடையின் உரிமத்தை அவர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இதுபோல மொத்தம் 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1773108 fireworkshops - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

Topics

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

Entertainment News

Popular Categories