மாணவி சத்யா- கொலைக்கான பின்னணி இதுதானா?..

921108 chennai news 1 - 2026

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவி கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த இளைஞர் சதீஷ் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையின் பின்னணிக்கான காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.  

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இத் தம்பதியின் மகள் சத்யா (20). இவர் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சேர்ந்த சதீஷ் (23),  சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும், தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சத்யா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். 
அண்மையில் சதீஷ், சத்யாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது.ரயிலில் தள்ளிவிட்டு கொலை: இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ், சத்தியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்யாவை தள்ளிவிட்டார்.  இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினார். 

இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச் சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இது குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சதீஷைப் பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படையினர், ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துடன் சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர்கள், பயணிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 

சத்யாவின் தந்தை தற்கொலை:  இந்நிலையில், மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ள.

இதனிடையே, சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தவிட்டு தலைமறைவாகி துரைப்பாக்கம் பகுதியில் இரவில் சுற்றித்திரிந்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

500x300 1776564 train new - 2026

கொலையின் பின்னணி இதுதானா? இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்வதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

அதாவது, பள்ளிப் பருவம் முதலே சத்யாவும் சதீஷ் காதலித்து வந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக சதீஷை விட்டு சத்யா பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சதீஷ், வழக்கம்போல வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவி சத்யாவிடம் அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ் வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சதீஷ், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.  இதில், ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சத்யா கொலை விவகாரத்தில் சதீஷிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவுக்கு பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும். 2016 ஆல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, 2021 இல் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதா, 2022 இல் சத்யா என சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் படுகொலைகள் தொடர்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories