முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க வேண்டும்- சுப்பிரமணிய சுவாமி

கேரளா ஆரிப் முகமதுகான் முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரை நீக்க, கேரள முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம் எழுதிய நிலையில்ஆரிப் கோரிக்கையை நிராகரித்தார் பினராயி விஜயன். இதனால் மீண்டும் சர்ச்சை நிலவிவரும் நிலையில் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடித்து வருகிறது. ஆளுநரை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாகவும் தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இது அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்று தமது கடிதத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கே.என்.பாலகோபால் பேச்சில் தவறு இல்லை என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

500x300 1782283 subramaniyan swamy - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories