கட்சி அறிவிப்பு நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்: கமலின் அழைப்பு

சற்றுமுன் தமிழகம்

மதுரை:
கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில் அவசியம் பங்கு கொள்ள வலியுறுத்தி மின்னஞ்சல் மூலம் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகரில் கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில், ஆதாரக் கொள்கைகளின் அடிநாத விளக்கம் அறிமுகமாகவதால் ரசிகர்கள் அனைவரும் அவசியம் பங்கு கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரசிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், இனியும் குறைகூறிப் பயனில்லை, செயலில் இறங்குவோம், நம் கனவுத் தமிழ்நாட்டை நாமே உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, நாம் எடுத்துக் கொண்ட 8 கிராமங்களை உயர்த்துவதுதான் முதல் பணி என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்துடன் தமது செல்பேசியில் எடுத்த வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.