துபாய்க்கு பயணித்த 68 அரசு பள்ளி மாணவர்கள்..

Published:

971267 anbilk - 2026

வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் துபாய்க்கு பயணம் செய்து அங்கு புத்தக கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்தனர். அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்து இருக்கிறது.

ஏற்கனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் 68 மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொள்கின்றனர். வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

இதனிடையே இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டுவிட்டரில், “மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img