தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்: மு.கருணாநிதி

karunanidhi சென்னை: தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை: முதலமைச்சராக பன்னீர்செல்வம் நடத்தும் ஆட்சியில், ஜெயலலிதாவின் அறிவிப்புகள் காற்றில் பறப்பதாகவும், கோவில் ஊழியர்கள் அது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறதே? ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 110வது விதியின் பெயரால் 12-8-2014 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தான், “தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் கோவில்களில் பணிபுரியும் 8 ஆயிரத்து 184 பணியாளர்களுக்கு தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 44 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்” என்று தெரிவித்து, ஐந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. ஜெயலலிதாவின் அறிவிப்பு என்னவாயிற்று? 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட அந்த ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதா? அவர்களது பணி வரன்முறை செய்யப்பட்டு விட்டதா? அதைக் கேட்டுத்தான் அந்தக் கோவில் ஊழியர்கள் தற்போது போராடுகிறார்கள். ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு பத்து பேர் இறந்ததற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று செய்தி வந்திருக்கிறதே? இந்த விபத்து பற்றி 1-2-2015 அன்றே நான் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். இந்த விபத்து குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து “உண்மை கண்டறியும்” முயற்சியிலே ஈடுபட்டார்கள். அந்தக் குழுவின் தலைவர் கூறும்போது, “வாரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விரிசல் இருந்தும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதில் சுத்திகரித்த திடக் கழிவுகளைத்தான் சேமிக்க வேண்டும். சுத்திகரிக்காமல் திரவக் கழிவுகளைத் தொடர்ந்து சேமித்ததால் விபத்து நடந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தொழிலாளர் நல ஆணையமும் செயல்படவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறைகள்தான் பலிக்குக் காரணம்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ஒரே நாளில் இரண்டு இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகச் செய்தி வந்திருக்கிறதே? “மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை” என்பார்கள்! இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லி வந்து நம்முடைய பிரதமருடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கிறார். மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இதிலே கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பினை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories