
வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.62 அடியாக உயர்ந்தது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை முதல் வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,417 கன அடி வீதம்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர்திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று மாலை 118.48 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.62 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.28 டி.எம்.சியாக உள்ளது.காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.