images 69 - 2026

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும்-அண்ணாமலை..

சற்றுமுன்
images 69 - 2026

அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித்தொகை வேறொரு திட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்யாது. அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்யம்தான்.

தமிழகத்தில் பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.