mcms 10 - 2026

ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் புகுந்த தீவிரவாதிகளால் பெண் ஆசிரியர் சுட்டுக்கொலை..

சற்றுமுன் இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் பள்ளிக்கூடத்தில் புகுந்து பெண் ஆசிரியரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரா என்ற இடத்தில் உயர்நிலை பள்ளி ஒன்றில் இன்று காலை ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வகுப்பறைக்குள் புகுந்த ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அந்த ஆசிரியை மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடல் முழுவதுமாக தோட்டாக்கள் பாய்ந்த அந்த ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த ஆசிரியை மரணம் அடைந்தார். உயிரிழந்த ஆசிரியை சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 5 மாதங்களில் ஜம்மு – காஷ்மீரில் 26 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டுமே பயங்கரவாதிகளால் குறிவைத்து தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீநகரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

mcms 10 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.