சிறுமியை 3 இளைஞர்கள் மாடியில் இருந்து தள்ளி கொடூரம்!

Published:

up - 2026

17 வயது சிறுமியை 3 இளைஞர் மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா நகரத்திலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை 3 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது. இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக மகளை பாலியர் ரீதியில் துன்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களில் ஒருவர் பெண்ணின் தந்தைக்கு போன் செய்து, உன் மகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தான் இரவு 8 மணிக்கு 3 இளைஞர்களும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர். பின் தூக்கிச் செல்ல முயன்றனர், குடும்பத்தினர் கூச்சலிட தொடங்கியதால், குற்றவாளிகள் மகளை 2வது மாடியிலிருந்து தூக்கி வீசி தப்பியோடியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

3 இளைஞர்களும் இளம் பெண் தங்கியருக்கும் குடியிருப்புக்குள் நுழைந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img