சிதம்பரம், கார்த்திக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை இல்லை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published:

E_V_K_S__Elangovanசென்னை: மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கோ, கார்த்திக்கோ நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர்கள் பெரிய நபர்கள் இல்லை, அதற்காக காங்கிரஸ் மேலிடத்திடம் பேச வேண்ண்டியதும் இல்லை என்று கூறினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இளங்கோவன் நேற்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… கோவை காங்கிரஸ் பிரமுகர்களும் சிதம்பரம் ஆதரவாளர்களுமான 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட விவகாரத்தில், சிதம்பரம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட கடிதம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை. அவர்கள் ஒன்றும் பெரிய நபர்கள் கிடையாது. இதுபற்றி காங்கிரஸ் தலைமையிடம் பேச வேண்டியதும் இல்லை. நான் இப்போது, சோனியா காந்தி, கட்சி பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். அதுபற்றி உங்களிடம் சொல்வதற்கு இல்லை. கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றார். மேலும், மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்து பல ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், திருடப்பட்டு உள்ளதாகவும், அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வருகின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இதுபோல மத்திய அரசு ஆவணங்கள் மாயமாகிவிட்டன. அப்போது ஆவணங்கள் திருட்டு போனதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் கோரினர். தற்போது மத்திய அரசு ஆவணங்கள் திருட்டு போய் இருப்பதால் முன்மாதிரியாக பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி, விலகுவாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

Related articles

Recent articles

spot_img