died - 2026

அதிர்ச்சி: 12 வயது பள்ளிச் சிறுவன் மாரடைப்பால் மரணம்!

சற்றுமுன் இந்தியா கிரைம் நியூஸ்
died - 2026

எச்சரிக்கை மணி: 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்து பகுதியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிச் சென்றுவிட்டு பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, திடிரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்யும் முதலுதவி சிகிச்சைகளை செய்த போதும் மாணவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

நான்காம் வகுப்பு படித்து வந்த மணீஷ் ஜாதவ் தனது சகோதரனுடன், வியாழக்கிழமை மதியம் பள்ளிப் பேருந்தில் ஏறியுள்ளார், சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விழுந்துள்ளார்.

அவருக்கு மருத்துவமனையில் சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் உயிர்பிழைக்கவில்லை. மரணம் அடைந்த அறிகுறிகளைப் பார்க்கும் போது மாரடைப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

எனினும் உடல் கூறாய்வு செய்ய பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. தங்களது மகனுக்கு இதற்கு முன்பு எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.