டிரைலர் வெளியீட்டில் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்த துணிவு ஜன11ல் வெளியீடு..?

Published:

images 93 - 2026

 உலகெங்கும் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ள துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.வரும்ஜன11ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.  துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இன்னும் இரு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.அதேநேரம், துணிவு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

துணிவு படம் ஜன.12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று விஜய்யின் வாரிசு பட டிரைலரும் வெளியாகும் என்பதால் அதனை பார்த்தபின் துணிவு வெளியீட்டுத் தேதியை போனி கபூர் உறுதிசெய்வார் எனத் தகவல் வெளியானது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

தற்போது, வாரிசு திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாவது   கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலையில் துணிவு படத்தை ஒருநாள் முன்பாக ஜன.11 ஆம் தேதி வெளியிட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானால் முதல்நாள் வசூல் குறையும் என்பதால் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவை வெளியிட ஏற்பாடு நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் விரைவாக 4 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. இந்நிலையில், யூடியூப்பில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் 3 நாள்களில் 40 மில்லியன் (4 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img