சென்னை: தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேலியாகக் கருத்து கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் பேசி இருப்பதைக் கேட்டால் நகைச்சுவையாக உள்ளது. நடக்காத ஒன்றைப் பற்றி இளங்கோவன் யதார்த்தமாகப் பேசி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
அமைச்சராக குஷ்பு: ஈ.வி.கே.எஸ் குறித்து தமிழிசை கிண்டல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari