valimai ajith - 2026

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்நிலையில் வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன.

இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே ‘வலிமை’ படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது.

குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

வலிமை படத்தின் திருநெல்வேலி – கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா உரிமையை MKRP Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending