சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு வீட்டின் சமையலறைக்குள் ஒரு ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று மறைந்திருப்பதைக் காண முடிகின்றது.
அந்த சமையலறைக்குள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் செல்கிறார். அங்கு பாம்பு (Snake) இருப்பதைப் பார்த்த அவர் அச்சத்தின் உச்சிக்கு சென்று அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடுகிறார்.
இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து அடைத்து சாத்துகிறார்கள். பின்னர், பாம்பைப் பிடிக்க, பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் வரவழைக்கப்படுகிறார்.
பாம்பு பிடிப்பவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாம்பு காஸ் சிலிண்டருக்குப் பின்னால் மறைந்துகொள்வதை வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை மிரட்டும் வகையில் உள்ளன.
பாம்பு பிடிப்பவர் பாம்பை வெளியே எடுக்க முயன்றவுடன், அது தன் ஆட்டத்தைக் காட்டத் துவங்குகிறது. இதைப் பார்த்து அந்த நபரும் சற்று அசந்து விடுகிறார்.
பாம்பு வெளியே வந்தவுடனேயே கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொள்வதையும், தொடர்ந்து கொத்த முயற்சி செய்வதையும் காண முடிகின்றது. பாம்பின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையைப் பார்த்து, ‘இந்த பாம்பு செம காண்டில் இருக்கிறது’ என பாம்பு பிடிப்பவரும் கூறுகிறார்.
எனினும், இந்த வேளையில் அந்த நபர், நாகப்பாம்பு தொடர்பான சில முக்கிய தகவல்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த நாகப்பாம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர், அதைப் பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தார்.
இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. MIRZA MD ARIF என்ற சேனலில் YouTube இல் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது.
இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.