மும்பை: ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பலில் மீன் பிடி படகு ஒன்று மோதி கப்பலின் பெரிஸ்கோப் சேதம் அடைந்தது. ஐ.என்.எஸ். சிந்துகோஷ் 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல். இது, நாட்டின் மேற்குக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தது. அரபிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள மேற் பகுதி வழியாக வெளிவந்த கடற்படை வீரர்கள், சிறிய படகு மூலம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் மீது மீன்பிடி படகு ஒன்று மோதியது. இதில் கப்பலின் பெரிஸ்கோப் சேதமடைந்தது. பெரிஸ்கோப்பில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக மும்பை கடற்படைத் தளத்திற்கு கப்பல் சென்றதாக கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பலில் படகு மோதி பெரிஸ்கோப் சேதம்
Published:

