
3 மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், திரிபுா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாநில தேர்தல்: வாக்காளர்கள் விபரம்
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில தேர்தல் வாக்களிப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளன.
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 376 வாக்குச்சாவடிகள், பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும்.
3 மாநிலங்களில், சுமார் 2.28 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், 97,000 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2,600 வாக்காளர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளதாகதேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.