மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை இன்று காலை நடை அடைப்பு..

FB IMG 1674179807166 - 2026
இன்று பந்தளம் புறப்பட்டு
சென்ற திருபாவரணங்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்தத நிலையில் இன்று காலை பந்தள மன்னர் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்ய கோயில் நடை அடைக்கப்பட்டு சாவியை மேல்சாந்தி மன்னரிடம் முறைப்படி வழங்க‌ மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நடத்த சாவியை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி திருபாவரணங்களுடன் பந்தளத்திற்கு நடைபயண யாத்திரையாக புறப்பட்டு சென்றார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதையடுத்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்தது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காலத்தில் சுமார் 45 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை காணிக்கையை எண்ணுவதில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது ஆய்வு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கை தொகையை எண்ணுவதில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்ய திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் காணிக்கை தொகையை எண்ணுவதற்கு நீண்ட நாள்களாவதால் ரூபாய் நோட்டுகள் பழையதாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் கேரள உயா்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பி.ஜி.அஜித் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சபரிமலை சிறப்பு ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், சபரிமலையில் உள்ள பல்வேறு உண்டியல்களில் ஏராளமான சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளை பக்தா்கள் காணிக்கையாக அளிக்கிறாா்கள். அந்தக் காணிக்கைகள் புதிய, பழைய கருவூலங்களில் வைத்து எண்ணப்படுகிறது.

மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ஆம் தேதி கோயில் மூடப்பட்ட பிறகும் இந்த எண்ணிக்கை பணி முடிவடைவதில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக சில்லறை எண்ணும் பணி அன்னதான மண்டபத்திலும் நடைபெறுகிறது. தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, காணிக்கை தொகை எண்ணப்படுவதில் குறைபாடு உள்ளதா என திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories