ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களே புதிய வாக்களர் அட்டை காத்திருக்கு..

Published:

images 2023 01 30T143341.749 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என என  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும். பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என  சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது.
இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ‘ஹோலோகிராம்’ இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும்.

அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது ‘நெகட்டிவ் இமேஜ்’ போன்ற படமும் இடம்பெறும்.போலியான அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img