தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!

Published:

gold rate - 2026
  • தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.4100 ஆக உயர்ந்தது
  • இன்று மாலை மேலும் 66 ரூபாய் அதிகரித்து ரூ.4166 ஆக உயர்ந்தது
  • தங்கம் ஒரு சவரன் விலை தற்போது ரூ.33,328-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் பரவி வருவதால், பங்குச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருகின்றன. இதனால், தங்கத்தின் மீது முதலீடுகள் செய்யப்படுகின்றன. எனவே, தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிப். 24 இன்று ஒரே நாளில் சவரன் ரூ.752 உயர்ந்துள்ளது.

தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.94 உயர்ந்து ரூ.4166க்கும், சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img