October 13, 2024, 9:48 PM
29 C
Chennai

பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை இன்று சந்திப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும்? அல்லது தனித்து போடியிடுமா? என்று குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆதரவு தரும் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ALSO READ:  பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து... பயணிகள் ரயிலுக்கு ‘வேட்டு’!

அதிமுக ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்கள் தங்கள் தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் நிறுத்தினார். இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முடிவெடுப்பதில் பாஜகவில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவி வந்தது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் பாஜக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று சென்ற அண்ணாமலை அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சோழவந்தான்: ஆயுத பூஜை போல கொண்டாடப்பட்ட விஸ்வகர்ம விழா!

இந்த சந்திப்பின் போது அதிமுக ஜெயக்குமார் உடன் இருந்தார். அண்ணாமலையுடன் பாஜக மேலிடம் பொறுப்பாளர் ரவி, கரு. நாகராஜன் உடன் சென்றார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு பாஜக ஆதரவு உறுதியாகி உள்ளது .

முன்னதாக, இரட்டை இலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு கிழக்க்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்த இறுதி விசாரணை அல்லது தீர்ப்பு இன்று வரலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week