கேரள பட்ஜெட் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் போராட்டம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

kini1 84 - 2026

கேரள பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நடத்தினர். இதனால் முக்கிய இடங்களில் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் அண்மையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள பட்ஜெட்டை கண்டித்து எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.

images 2023 02 09T135520.752 - 2026

இந்நிலையில், கேரள பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டயம் ஆட்சியர் அலுவலகம், கணையனூர் தாலுகா அலுவலகம் முன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்கும் முயற்சியில் கேரள காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

3-வது நாளாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இன்று எதிர்க்கட்சியினர் போராட்டம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img