பதவிப் பிரமாணத்துக்கு விரோதமாக எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் பேச்சு: இந்து முன்னணி கண்டனம்!

inigo irudayaraj mla - 2026

இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அந்நிய சக்திகள் – பதவி பிரமாணத்திற்கு எதிராக திமுக MLA இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருகிறார் என்று இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலை பற்றி இந்தியாவில் உள்ள மக்களுக்கோ கட்சிகளுக்கோ இல்லாத கவலை இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அந்நிய வெளிநாட்டு சக்திகளுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாத, மதமாற்ற சக்திகளுக்கு இருந்து வருகிறது..

பாராளுமன்றத் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு பார்வையோடு செயல்படும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக களம் அமைக்க வேண்டும் என்ற திட்டமிடுதலோடு இந்தியாவில் இருக்கும் தேச விரோதிகள் உடன் கைகோர்த்துக்கொண்டு இந்த தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய முயற்சி செய்து வருகிறார்கள்.
அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் சமீபத்திய பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட வெளியீடு.அதனுடைய தொடர்ச்சி தான் திருச்சி திமுக கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜின் பேச்சு..

அவர் கிறிஸ்தவ மக்களிடம் நாம் எப்படி முட்டி போட்டு திமுக ஆட்சியை கொண்டு வந்தோமோ, அதுபோல நாம் முட்டி போட்டு ஜெபம் செய்து 2024ல் பாரதிய ஜனதா கட்சியை வீட்டிற்கு அனுப்பி காங்கிரஸை ஜெயிக்க வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பாகப் பேசுவது தன்னுடைய ரகசிய காப்பு பிரமாணம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் கொள்ளும் பதவி பிரமாணத்திற்கு எதிரானதாகும். அனைவருக்கும் பொதுவான எம்எல்ஏ ஒரு மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை வழிகாட்டுவதும் அதனைக் கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்றுக் கொள்வதும் மிஷனரிகள் மத ரீதியான செயல்பாடுகளை விட அரசியல் செயல்பாடுகள் தான் செய்து வருகிறார்கள் என்பது தெளிவாக காட்டுகிறது.

பகுத்தறிவு எனப் பேசிக் கொண்டும் திமுக கிறிஸ்தவர்களை முட்டி போட்டு ஜபம் செய்ய சொல்லுவது என்பது எந்த வகையான பகுத்தறிவு என்பது நகைப்புக்குரியது.

இவ்வாறாக பாராளுமன்றத் தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளும், அவர்களுக்கு இந்தியாவில் களம் அமைத்துக் கொடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறை ஆய்வு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேச விரோத செயலில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories